வெங்காயம் உரித்தால் எதுவும் இல்லையாம்... ஆனால் வெங்காயம் சாப்பிட்டால் ஒன்று உள்ளதாம் !!அது என்ன??

benefits of oninon usage

by Logeswari, Sep 15, 2020, 17:51 PM IST

என்ன எல்லோரும் தலைப்பை பார்த்து என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா??வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக பலம்,சக்தி,நீண்ட ஆயுட் காலம் ஆகியவை கிடைக்கும்.இவ்வகை நன்மைகள் பெற வேண்டும் என்றால் தினமும் வெங்காயம் சாப்பிட பழகிகொள்ளுங்கள்..மேலும் வெங்காயம் நம் உடலில் எவ்வகை நல்லது செய்கிறது என்பதை பார்ப்போமா..

வெங்காயத்தில் கெட்ட கொழுப்பை குறைக்கும் வல்லமை கொண்டது.இதனால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து இரத்த ஓட்டத்தை சீர் செய்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

தினமும் உணவில் கலந்த வெங்காயத்தை உண்பதால் எலும்பு வலிமை பெறுகிறதாம்..அதாவது ஒரு வெங்காயத்தில் 25.3 மி.கி கால்சியம் உள்ளது ஒரு ஆராய்ச்சியில் சுகாதாரத்துறை கூறியுள்ளது.இதனால் வலுவிழந்த எலும்புகள் வெங்காயம் உன்பதால் எலும்பு முழு சக்தியையும் பெற்று வலிமை பெறுகிறது.

வெங்காயத்தில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் கே உள்ளது.முகத்திற்கு தேவையான எல்லா வைட்டமின்களும் உள்ளதால் முகத்தில் உள்ள சருமம் ஈரப்பதம் அடைந்து முகம் மென்மையாகவும்,பொலிவாகவும் இருக்க உதவுகிறது.ஆதலால் முகம் பொலிவாக வேண்டும் என்றால் வெங்காயத்தை தவிர்க்காமல் உண்ணுங்கள்..

வெங்காயம் சாப்பிடுவதால் செரிமானத்தை ஊக்குவிக்கிறது.அது மட்டும் இல்லாமல் சர்க்கரையின் அளவை சீர் செய்யவும் உதவுகிறது.

You'r reading வெங்காயம் உரித்தால் எதுவும் இல்லையாம்... ஆனால் வெங்காயம் சாப்பிட்டால் ஒன்று உள்ளதாம் !!அது என்ன?? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை