ஒன்பிளஸ் 8 வரிசை திறன்பேசிகளில் சில மாற்றங்களுடன் ஒன்பிளஸ் 8டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் (65W) ஆகக்கூடிய வசதியும், பின்புறத்தில் மூன்று காமிராக்களுக்குப் பதில் குவாட் காமிரா வசதியும் கொண்டது.அமேசான் பிரைம் உறுப்பினர்களும், ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களும் அக்டோபர் 16ம் தேதியும் மற்றவர்கள் அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் இந்தியா இணையதளங்களிலும் அங்காடிகளிலும் அக்டோபர் 17ம் தேதியும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 8டி சிறப்பம்சங்கள்:
சிம் : இரண்டு நானோ சிம்கள்
தொடுதிரை : 6.55 அங்குலம்; எஃப்எச்டி; 1080X2400 பிக்ஸல் தரம்; Fluid AMOLED
புத்தாக்க விகிதம்: 120Hz (refresh rate)
விகிதாச்சாரம் : 20:9
பிக்ஸல் டென்சிட்டி: 402 ppi
முன்புற காமிரா : 16 எம்பி ஆற்றல் Sony IMX471 sensor
பின்புற காமிரா : 48 எம்பி + 16 எம்பி + 5 எம்பி + 2 எம்பி குவாட் காமிரா
இயக்கவேகம் : 8 ஜிபி மற்றும் 12 ஜிபி
சேமிப்பளவு : 128 ஜிபி மற்றும் 256 ஜிபி (அளவை கூட்டும் வசதி இல்லை)
பிராசஸர் : ஸ்நாப்டிராகன் 865 SoC
இயங்குதளம் : ஆக்ஸிஜன் ஓஎஸ் 11; ஆண்ட்ராய்டு 11 தளத்தை அடிப்படையாகக் கொண்டது
மின்கலம் : 4300 mAh
பரிமாணம் : 160.7X74.1X8.4 மிமீ.
எடை : 188 கிராம்
5ஜி, 4ஜி மற்றும் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்
8ஜிபி+128ஜிபி ஸ்மார்போன் ரூ.42,999/- விலையிலும் 12ஜிபி+256ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.45,999/- விலையிலும் கிடைக்கும்.
அமேசான்.இன் தளத்தில் எச்டிஎஃப்சி அட்டைதாரர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி, கடைகளில் எச்டிஎஃப்சி டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.1,000 தள்ளுபடியும், எச்டிஎஃப்சி கிரடிட் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.2000/- தள்ளுபடியும் அக்டோபர் 24ம் தேதி முதல் வழங்கப்படும்.