சந்தோஷமான விஷயத்தை இனிப்புடன் தொடங்குவதற்கு இந்த கேரட் அல்வா செய்து மகிழுங்கள்..அல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?? சரி வாருங்கள் கேரட்டில் அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
கேரட்-தேவையான அளவு
பால் -750 ml
நெய் -2 ஸ்பூன்
சர்க்கரை -100 கிராம்
முந்திரி - தேவையான அளவு
உலர்ந்த திராட்சை -தேவையான அளவு
பாதாம் - 4-6
பிஸ்தா -4-6
கிஸ்மிஸ் - தேவையான அளவு
செய்முறை:-
முதலில் தேவையான அளவு கேரட் எடுத்து கொண்டு நன்றாக துருவி கொள்ளவும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றவும்.
நெய் காய்ந்த பிறகு அதில் முந்திரி,உலர்ந்த திராட்சை மற்றும் கிஸ்மிஸ் ஆகியவை சேர்த்து நன்கு வறுத்து கொண்டு தனியாக எடுத்து கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை அதில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் மற்றும் பால் ஆகியவை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
பால் நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறி விட வேண்டும்.பால் கேரட்டோடு சேர்ந்து கெட்டியான பிறகு இனிப்புக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
சர்க்கரை கரையும் வரை 15 நிமிடம் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.15 நிமிடம் கழித்து அதில் நெய்யில் வறுத்ததை சேர்த்து கொண்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
கடைசியில், நறுக்கிய பாதாம்,பிஸ்தா ஆகியவை அலங்காரம் செய்து கலக்கலாக பரிமாறுங்கள்..