ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாவது உடலுறவின்போதுதான். உடலுறவினை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளன; அவற்றில் புதிய புதிய உண்மைகள் வெளிவருகின்றன. உடலுறவின்போது உடலின் செயல்திறன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அது உடலுக்கு மட்டும் நன்மை செய்வதோடு நின்றுவிடுவதில்லை. உடலுறவின்போது மனதுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய எண்டார்பின் வெளிப்படுகிறது. ஆகவே, உடலுறவு இன்பம் மிக்கதாக திகழ்கிறது.
தாம்பத்ய உறவு முடிந்ததும், ஆண் துணை 'குட் நைட்' என்று கூறிவிட்டு புரண்டுபடுத்தால் பெண்கள் அதிகம் ஏமாற்றமடைகிறார்கள். பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறார்கள். உடலுறவுக்கு முன்பான நேரம், உடலுறவு நிகழும் நேரம் இவற்றை காட்டிலும் உறவு முடிந்த பொழுதையே பெண்கள் முக்கியமானதாக உணர்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
உடலுறவில் உச்சநிலையை அடையும்போது பெண்கள் துணையின்மீது பெரிய நம்பிக்கை கொள்கிறார்கள். பெண்களில் இந்த நம்பிக்கையுணர்வு தோன்றுவதற்கு ஆக்ஸிடாக்சின் என்ற ஹார்மோன் காரணமாகிறது. ஆனால், ஆண்களில் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, ஆக்ஸிடாக்சினை மேற்கொண்டுவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆகவே, உடலுறவுக்கு பின்பு ஆண்களின் எதிர்பார்ப்பும், பெண்களின் எதிர்பார்ப்பும் முற்றிலும் வேறுபட்டவையாய் உள்ளன. பெண்கள் உடலுறவை உணர்வுரீதியானதாக கருதுகிறார்கள்.
உடலுறவை உள்ளம் சார்ந்த அர்ப்பணிப்பு சார்ந்ததாக பெண்கள் கருதுகிறார்கள். ஆகவே, உடலுறவின் பின்பு உரையாடாவிட்டால் அது மனம் சார்ந்த உறவாக அல்லாமல் வெறுமனே உடல் இச்சையை தணிப்பதாக மட்டுமே அவர்களுக்குத் தோன்றுகிறது. பெண்கள் உடலுறவை உணர்வோடு தொடர்புடையதாக நோக்குகிறார்கள்.
உடலுறவுக்குப் பின் துணைவர் தன்னுடன் நன்றாக பேசவேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு. அவர்கள் நம்பும் விஷயங்கள், அவர்களது விருப்பங்கள், மன அழுத்தத்தை தரக்கூடிய விஷயங்கள் உள்ளிட்டவற்றை குறித்து பேசும் மற்றும் பேசுவதை கவனிக்கக்கூடியவராக துணைவர் இருக்கவேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாகும்.
உடலுறவில் உச்ச இன்பத்தை அடைய தனக்கு உதவும் ஆண், உறவு முடிந்த பின்னர் தன்னுடன் மனம்விட்டு பேசவேண்டும்; தான் மனம் விட்டு பேசுவதை பொறுமையாக கேட்கவேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு. ஜஸ்ட் 'குட் நைட்' என்று கூறிவிட்டு திரும்பி படுத்தால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள் என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும்.