சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 வரிசையில் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21+, கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆரம்பித்துள்ளது. இப்போது வாங்கினால் ஜனவரி 25ம் தேதி முதல் டெலிவரி கிடைக்கும்.எஸ்21 வரிசை ஸ்மார்போன்களில் எஸ்21 அல்ட்ரா போனில் குவாட் காமிரா உள்ளது எஸ்-பென் ஸ்டைலஸ் இதில் இயங்கும். எஸ்21 மற்றும் எஸ்21+ போன்களில் எஸ்-பென் இயங்காது. இவை இரண்டும் டிரிபிள் காமிரா கொண்டவை. சாம்சங் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21+ மற்றும் கேலக்ஸி எஸ்21அல்ட்ரா மூன்றுமே எக்ஸிநோஸ் சிப்பில் இயங்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
தொடுதிரை : 6.20 அங்குலம்; 1080X2400 பிக்ஸல் தரம்
இயக்கவேகம் : 8 ஜிபி
சேமிப்பளவு : 128 ஜிபி மற்றும் 256 ஜிபி
முன்புற காமிரா: 10 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 64 எம்பி + 12 எம்பி +12 எம்பி (டிரிபிள் காமிரா)
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 11
பிராசஸர் : சாம்சங் எக்ஸிநோஸ் 2100
மின்கலம் : 4000 mAh
சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் (8ஜிபி+128 ஜிபி) ரூ.69,999/- விலையிலும் 8ஜிபி+256 ஜிபி) ரூ.73,999/- விலையில் கிடைக்கும்.
கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்21+ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை : 6.70 அங்குலம்; 1080X2400 பிக்ஸல் தரம்
இயக்கவேகம் : 8 ஜிபி
சேமிப்பளவு : 128 ஜிபி மற்றும் 256 ஜிபி
முன்புற காமிரா: 10 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 64 எம்பி + 12 எம்பி +12 எம்பி (டிரிபிள் காமிரா)
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 11
பிராசஸர் : சாம்சங் எக்ஸிநோஸ் 2100
மின்கலம் : 4800 mAh
சாம்சங் கேலக்ஸி எஸ்21+ ஸ்மார்ட்போன் (8ஜிபி+128 ஜிபி) ரூ.81,999/- விலையிலும் 8ஜிபி+256 ஜிபி) ரூ.85,999/- விலையில் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.80 அங்குலம்; 1440X3220 பிக்ஸல் தரம்
இயக்கவேகம்: 12 ஜிபி
சேமிப்பளவு : 256 ஜிபி
முன்புற காமிரா: 40 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 108 எம்பி + 12 எம்பி +10 எம்பி + 10 எம்பி (குவாட் காமிரா)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
பிராசஸர்: சாம்சங் எக்ஸிநோஸ் 2100
மின்கலம்: 5000 mAh
சாம்சங் கேலக்ஸி எஸ்21அல்ட்ரா ஸ்மார்ட்போன் (12ஜிபி+256 ஜிபி) ரூ.1,05,999/- விலையில் கிடைக்கும்.