4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0 வசதிகளுடனும், பின்புறம் 13 எம்பி ஆற்றல் கொண்ட முதன்மை காமிரா உள்ளிட்ட இரண்டு காமிராக்களுடனும் ரியல்மீ நார்ஸோ 30ஏ ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. மார்ச் மாதம் 5ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரியல்மீ நார்ஸோ 30ஏ போன், ஃபிளிப்கார்ட், ரியல்மீ.காம் உள்ளிட்ட தளங்களிலும் முன்னணி கடைகளிலும் கிடைக்கும்.
ரியல்மீ நார்ஸோ 30 ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
தொடுதிரை: 6.5 அங்குலம் எச்டி+ (720X1600 பிக்ஸல்)
வாட்டர்டிராப் ஸ்டைல் நாட்ச்; பிரைட்நஸ் 570 nits
இயக்கவேகம்: 3 ஜிபி மற்றும் 4 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி முதன்மை காமிரா உள்பட டூயல் ரியர் காமிரா
பிராசஸர்: ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; ரியல்மீ யூஐ
மின்கலம்: 6000 mAh
சார்ஜிங்: 18W ஃபாஸ்ட் சார்ஜிங்; ரிவர்ஸ் சார்ஜிங்
ஒரு நேரம் சார்ஜ் செய்தால் 46 நாள்கள் ஸ்டாண்ட்பை என்று கூறப்படுகிறது. 3ஜிபி+32ஜிபி வகை ரியல்மீ நார்ஸோ 30ஏ ஸ்மார்ட்போன் ரூ.8,999/- விலையிலும் 4ஜிபி+64ஜிபி வகை போன் ரூ.9,999/- விலையிலும் கிடைக்கும்.