ரெட்மி நோட் 10 வரிசையில் பட்ஜெட் போன் என்று அறியப்படும் நோட் 10 ஸ்மார்ட்போன் இன்று (மார்ச் 30) நண்பகல் முதல் அமேசான் மற்றும் மி.காம் தளங்களிலும் மி ஹோம் விற்பனையகங்களிலும் விற்பனையாகிறது.
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.43 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல் தரம்); சூப்பர் AMOLED
பிரைட்னஸ்: 1000 nits
இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (512 ஜிபி வரை உயர்த்திக்கொள்ளக்கூடியது)
செல்ஃபி காமிரா: 13 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி (அல்ட்ரா வைடு ஆங்கிள்) + 2 எம்பி (மேக்ரோ ஷூட்டர்) + 2 எம்பி (டெப்த் சென்ஸார்) (குவாட் காமிரா)
பிராசஸர்: ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 678 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; MIUI 12
மின்கலம்: 5000 mAh
சார்ஜிங்: 33W
4ஜி VoLTE, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், ஐஆர் வசதிகள் கொண்ட ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி சாதனம் ரூ.11,999/- விலையிலும் 6 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.13,999/- விலையிலும் விற்பனையாகிறது.