பசியை தூண்டுவதோடு அஜீரணத்தைப் போக்கும் சிம்பிள் ரெசிபி..!

 இன்று விநாயகர் சதுர்த்தி, ஸ்பெஷல் ஐட்டம் நிறைய செஞ்சி சாப்ட்டு இருப்பீங்க. ஒரு சில பேருக்கு கல்லைத் திண்ணாக் கூட ஜீரணம் ஆயிடும்,ஆனா ஒரு சில பேருக்கு ஜீரணம் ஆகுறது கஷ்டம். கவலை வேண்டாம், நீங்க எது சாப்பிட்டாலும் இரவு தோசைக்கு இந்த இஞ்சி சட்னி செஞ்சு சாப்பிடுங்க. உங்க வயிறு லேசாயிடும்.

தேவையானப் பொருட்கள்:

இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)

தேங்காய் துருவல் – 1/2 கப்

காய்ந்த மிளகாய் – 1

உளுத்தம்பருப்பு – 1 ½  டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – 4 அடுக்குகள்

பெருங்காயம் - சிறிதளவு

புளி – சிறு நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.

இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் கலந்து ஆற வைக்கவும்

ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும். கல் உப்பு உபயோகிப்பது இன்னும் சுகம்.

இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.

விரும்பினால் அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்லும்போது தேங்காயையும் நன்கு வதக்கியே அரைத்து எடுத்துச் செல்லலாம். சீக்கிரம் கெடாது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

A new Raddish Vada Recipe

எத்தனையோ வகை வடைகளை சாப்பிட்டு இருப்பீங்க.. ஆனா முள்ளங்கில வடை சாப்பிட்டு இருக்கீங்களா ? இதோ முள்ளங்...

How to cook mutton paya ?

இன்னைக்கு நாம அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான ஆட்டுக்கால் பாயா எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா ?...

Yummy egg biriyani recipe

அவசரத்துக்கு சிக்கன், மட்டன் கிடைக்கலையா.. நோ பிராப்லம்.. அதற்கு நிகரான சுவையில் முட்டை பிர...

Chicken Rasam recipe

நாட்டு கோழி கறியை கொண்டு சூப்பரான ரசம்.. இதை கேட்கும்போதே நாவூறுதல்லவா ?? வாங்க நாட்டுக்கோழி ரசம் எப...

Yummy Curd chicken gravy recipe

உங்களுக்கு அசைவம்னா புடிக்குமா ? அதிலும் சிக்கன் என்றால் ரொம்ப பிடிக்குமா ? அப்போ இன்னிக்கு உங்களுக்...

Spicy coconut chicken fry recipe

உங்களுக்கான ருசியான தேங்காய் கோழி வறுவல் ரெசிபி &...