சூடா ஒரு கப் இஞ்சி டீ குடிங்க மனக்கவலைக்கு பை பை சொல்லுங்க..

by Isaivaani, Mar 27, 2018, 15:37 PM IST

அன்றாட சமையல் பொருட்களில், ஆரோக்கிய பட்டியலில் எப்போதும் இடம்பிடிக்கும் முக்கிய பொருள் இஞ்சி. உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் இஞ்சி மனக்கவலையை போக்கும் மருத்துவ நிவாரணியகவும் இருக்கிறது.. சரி இஞ்சி டீயின் மருத்துவ பயன்கள் குறித்து பார்ப்போம்..

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம்,கவலை ஏற்படும்போது நச்ச ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவலை ஏற்படும்போது இஞ்சி டீ குடிக்க சொல்கிறார்கள்.

மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது,
இதனால் ஜீரன சக்தி பாதிப்படைகிறது. இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத்துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அழுத்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைக்கும். மேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச்செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கும்.


மலச்சிக்கல்,அழற்சி,சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகளை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு ரத்த சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது. எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவு ஜீரண சக்தியையும் கொடுக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைபிடிப்பைப்போக்கவும் இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்ததுணியை வயிற்றின் மீது வைத்துக்கொண்டால் பெரிய அளவுக்கு நிவாரணம் கிடைக்கும்.

You'r reading சூடா ஒரு கப் இஞ்சி டீ குடிங்க மனக்கவலைக்கு பை பை சொல்லுங்க.. Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை