லாக் அவுட் செய்தாலும் டீடெய்ல்ஸை அறிந்திடும் ஃபேஸ்புக்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள், முகநூல் கணக்கிலிருந்து வெளியேறியிருந்தால்கூட (Log Out) அவர்களைப் பற்றிய விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சென்று சேருவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

பிரைவசி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம், 'ஆண்ட்ராய்டு செயலிகள் தரவுகளை ஃபேஸ்புக்கிடம் எப்படி பகிர்ந்து கொள்கின்றன?' (How Apps on Android Share Data with Facebook) என்ற தலைப்பில் செயலிகள் பற்றிய ஆய்வு ஒன்றை செய்துள்ளது. எஸ்டிகே என்னும் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மேம்பாடு அமைப்பு (Facebook Software Development Kit) மூலம் 61 விழுக்காடு செயலிகள் தங்கள் பயனர்கள் பற்றிய தகவல்களை முகநூல் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பது தெரிய வந்துள்ளது.

முகநூலில் கணக்கு இல்லாதோர், கணக்குகளில் உள்நுழையாமல் இருப்போரைப் பற்றிய விவரங்கள் கூட அந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு செயலிகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தொகுக்கப்பட்டால், மக்களின் அன்றாட செயல்பாடுகள், விருப்பங்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டுகொள்ள முடியுமாம்.

பிரைவசி இண்டர்நேஷனல் ஆய்வாளர்கள், தாங்கள் செய்த ஆய்வு ஒன்றை இதற்கு உதாரணமாக காட்டியுள்ளார்கள்.

முகமதிய தொழுகை செயலியான Qibla Connect, மாதவிலக்கு நாள்களை அறியக்கூடிய செயலியான Period Tracker Clue, வேலை தேடுவோருக்கான செயலியான Indeed, குழந்தைகளுக்கான செயலியான My Talking Tom ஆகிய செயலிகளை ஒருவர் பயன்படுத்துகிறார் என்ற தகவல், இஸ்லாமிய சமயம் சார்ந்த பெண்ணாகிய அந்தப் பயனர், வேலை தேடக்கூடியவராகவோ, பெற்றோராகவோ இருக்க வாய்ப்பு உள்ளது என்ற முடிவெடுக்க உதவும்.

இந்த தகவல், முகநூல் நிறுவனத்திற்குப் பகிரப்படுவதோடு நின்று விடுவதில்லை. கூகுளின் GAID என்ற விளம்பர குறியீட்டுக்கும் (Google Advertising ID) இது பகிரப்படுகிறது. பல்வேறு செயலிகள், இணைய உலாவிகள் மூலம் திரட்டப்படும் இதுபோன்ற தரவுகளை கொண்டு பயனரை பற்றிய விவரங்கள் தொகுக்கப்படுகின்றன என்று கூறும் அந்த ஆய்வு, முகநூல் நிறுவனம் வெளிப்படையாக தெரிவித்தாலன்றி, இது போன்ற தரவுகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்ற விவரங்களை அறுதியிட்டு கூற இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்

READ MORE ABOUT :