மூச்சுத்திணறல் ஏற்பட என்ன காரணம் தெரியுமா ??

ஆஸ்துமா, இழுப்பு பிரச்சினை உடையவர்களுக்கு அதிக சத்தத்தோடு சுவாசம் நிகழும். இருதயத்தினால் போதுமான ரத்தத்தினை பம்ப் செய்ய இயலாத பொழுது மூச்சு திணறுவது போல் இருக்கும். மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். தொடர் பாதிப்பில் நோயின் தாக்கம் கூடிக் கொண்டே போகும்.

ஏன் மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது?

ஆஸ்துமா, அலர்ஜி, மூச்சுத்திணறல் அதிகம் இருக்கும். நிமோனியா: நுரையீரலில் அதிக கிருமி பாதிப்பு இருக்கும். ஜுரம் இருமல் இருக்கும். சளி பச்சை நிறமாக இருக்கும்.

இருதய நோய்: இருதயம் சரியாய் இயங்க முடியாத நிலையில் மூச்சுத் திணறல் ஏற்படும்.

நுரையீரல் பாதிப்பு: நுரையீரலில் ரத்த கட்டி அடைப்பு ஏற்படும் பொழுது மூச்சுத் திணறல் வரும். காலில் ஏற்படும். ரத்த கட்டி ஆடு தசையில் அதிக வலியினையும், வீக்கத்தினையும் ஏற்படுத்தும். அது பாதிக்கப்பட்டோர் அதிக நடமாட்டமின்றி வெகு நாள் இருக்கும் பொழுது ரத்தத்தின் மூலமா நுரையீரலை அடையும் பொழுது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.

மன உளைச்சல், கவலை இவை படபடப்பினையும், மூச்சுத் திணறலையும் உருவாக்கும்.

ரத்த சோகை: ரத்த சோகை உடையவர்களுக்கு 10 அடி நடந்தாலே மூச்சுத் திணறல் ஏற்படுத்தும்.

உடலில் ஏதாவது காரணத்தினால் அதிக வலி ஏற்படும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும்.

அதிக கால மூச்சுத் திணறல் ஏற்படுவதன் காரணங்கள்:

அதிக எடை, கட்டுப்படாத ஆஸ்துமா, புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு.

இருதய பாதிப்பு – மூச்சுத் திணறல், கணுக்கால் வீக்கம், முறையற்ற இருதய துடிப்பு என இருக்கும்.

அதிக ரத்த போக்கு (விபத்து, மாதவிலக்கில் அதிக ரத்த போக்கு போன்றவை)

சளி, ப்ளூ, மரகத்தூள், சிறு பூச்சிகள், கரப்பான் பூச்சி, உணவு அலர்ஜி, ஒத்துக் கொள்ள வாசனை போன்றவை ஆகும். 

காரணத்திற்கான சிகிச்சை எடுக்கும் பொழுதே தீர்வு கிடைக்கும். பொதுவில் இத்தகைய பாதிப்புடையோர் சிறுசிறு உணவாக 4-6 முறை எடுத்துக் கொள்வது நல்லது. நடை பயிற்சி உதவும். செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!