மணக்க மணக்க.. சுவையான செட்டிநாடு மீன் குழம்பு..

by Isaivaani, Jan 22, 2018, 18:58 PM IST

மணக்க மணக்க.. சுவையான செட்டிநாடு மீன் குழம்பு.. சூப்பர் ரெசிப்பி.. 

தேவையான பொருட்கள்:

மீன் – 10 துண்டுகள்

தக்காளி – 5 சிறியது

சின்ன வெங்காயம் – 15-20 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 10-15 பற்கள்

கறிவேப்பிலை – சிறிது

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சாம்பார் பொடி-1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

தாளிக்க:

நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பின் அதில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து, அதில் மிளகாய் தூள்,சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி,புளிச்சாறு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும்.

மீனானது நன்கு வெந்ததும், கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி!!!

You'r reading மணக்க மணக்க.. சுவையான செட்டிநாடு மீன் குழம்பு.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை