ருசியான முட்டைக்கோஸ் சட்னி ரெசிபி

Feb 17, 2018, 15:29 PM IST

முட்டைக்கோஸ்ல சட்னியா.. ?? அப்படினு ஆச்சரியமா கேட்காதீங்க. முட்டைக்கோஸ்ல சட்னி செய்து ஒரு முறை சாப்பிட்டு பாருங்க...

பொதுவா முட்டைக்கோஸ்ல கூட்டு, பொரியல் தான் செய்வோம். ஆனால், முட்டைக்கோஸ்ல சட்னி செய்றது புதுவகை.  இட்லி, தோசைக்கு ஏற்ற சைட் டிஷ் தான் முட்டைக்கோஸ் சட்னி. அதுவும், இந்த சட்னி செய்ய மெனக்கெட தேவையே இல்லை. ஜஸ்ட் லைக் தட்னு அசால்ட்டாக செஞ்சிடலாம்.
சரி, இப்போ முட்டைக்கோஸ் சட்னிக்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை என்னவென்று பார்க்கலாமா..

தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது)

வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)

இஞ்சி - 1/2 இன்ச்

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

புளி - சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)

துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2

டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 1

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின்பு அதனை அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைக்கோஸ் சட்னி ரெடி!!!

You'r reading ருசியான முட்டைக்கோஸ் சட்னி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை