சுவையான மைசூர் மசாலா தோசை ரெசிபி..

Apr 11, 2018, 16:18 PM IST
காலை வேளையில் நன்கு சுவையான டிபன் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் மைசூர் மசாலா தோசை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இங்கு மைசூர் மசாலா தோசை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 4 கப்
உருளைக்கிழங்கு - 4
பச்சை பட்டாணி - 3 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - கால் கப் 
கடலைப்பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 3
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன் 
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய்த்துருவல் - அரை கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - கால் ஸ்பூன் 
சீரகம் - கால் ஸ்பூன் 
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
மைசூர் மசாலா தோசை செய்வதற்கு முதலில் வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து ஆறவைத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்கள் ஆறியதும், அவற்றை மிக்ஸியில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல் மற்றும் உப்பு சேர்த்து சட்னியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 
பின்பு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள பருப்பை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
அடுத்து அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் கிளறி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லித்தழைகளை தூவி கிளறி வைக்கவும். பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்க்கவும். 
தோசை ஓரளவு வெந்ததும், சட்னியை பரவலாக தோசை மேல் தடவி இரண்டு நிமிடம் விட்டு தோசையின் ஒரு பாதியில் மசாலாவை வைத்து மடிக்கவும். இப்போது சுவையான மைசூர் மசாலா தோசை ரெடி.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com 

You'r reading சுவையான மைசூர் மசாலா தோசை ரெசிபி.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை