குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை சத்துத்தரும் முருங்கைக்கீரை குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - ஒரு பெரிய கப்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், துவரம் பருப்பு, அரிசியை மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிஞ்சதும், சின்ன வெங்காயம், தட்டி வைத்த பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, அரைத்து வைத்த அரிசி பருப்பை தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து வெங்காயத்துடன் சேர்த்து கலந்து வேகவிடவும்.
இந்த கலவை வெந்து கொதி வரும்போது, ஆய்ந்து அலசி தயாராக வைத்த முருங்கைக்கீரையை போட்டு வேகவிடவும். தேவைப்பட்டால் தண்ணீர், உப்பு சேர்க்கலாம்.
கீரை வெந்ததும், கடைந்து தாளித்து சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.