சுவையும்.. ஆரோக்கியமும்.. ஒன்று சேர்ந்த பாலக் கீரை பூரி ரெசிபி..!

Advertisement

கீரையில் எந்த உணவு செய்தாலும் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.பூரி என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த உணவு குறிப்பாகக் குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. ஆனால் டயட்டில் இருப்பவர்கள் பூரியில் எண்ணெய் இருப்பதால் அதனைச் சாப்பிடத் தயங்குவார்கள். அதே பூரியில் பாலக் கீரையைச் சேர்த்தால் அதனின் ஆரோக்கியம் பல மடங்கு உயர்கிறது. பாலக் கீரையைக் கொண்டு பூரி சாப்பிடால் உடல் எடையை குறைக்கப் பெரிய பங்கு வகிக்கின்றது. பாலக் கீரையில் எப்படி சுவையான பூரி செய்வதைக் குறித்துப் பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-

கோதுமை மாவு-1 கப்
உப்பு - தேவையான அளவு
பாலக்கீரை - 150 கிராம்
சீரகம் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
தண்ணீர் -தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் கோதுமை மாவு, சீரகம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பிறகு பாலக் கீரையை ஆய்ந்த பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.

பாலக் கீரையைக் குக்கரில் சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு கீரையை மட்டும் எடுத்து மிக்சியில் சேர்த்து அதனுடன் இஞ்சி ஆகியவை அரைத்துக் கொள்ளவும். அரைத்த கீரையைக் கோதுமை மாவில் தண்ணீரை மட்டும் வடிகட்டிக் கொள்ளவும்.

பிறகு மாவில் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்து மெருதுவாக பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை ஒரு 2 மணி நேரம் ஊற வைக்கவும். மாவு ஊறிய பின் சிறு சிறு பாலாக உருட்டி கொள்ளவும்.

பின்னர் உருண்டையை சப்பாத்தி வடிவம் போல் வட்டமாய் திரட்டி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடான பிறகு மாவை சேர்த்து பொன்னிறமாகப் பொறித்து எடுத்து கொள்ளவும்.

பாலக்கீரை பூரியை காய்கறி குருமாவுடன் சேர்த்து சாப்பிட்டால் 'ஆரோக்கியம்' மற்றும் 'சுவை' ஆகிய இரண்டும் ஒரே உணவில் கிடைக்கும்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>