செம சிம்பிளான டிஷ்.. உருளை மசாலா ரைஸ் ரெசிபி..!

Advertisement

வேளைக்கு செல்லும் பெண்களுக்கு சமைக்க குறைந்த நேரம் மட்டுமே இருக்கும். இதனால் அவசர அவசரமாய் சமைத்து உப்பு சப்பு இல்லாத உணவுகளை தான் நாம் அன்றாட வாழ்வில் சாப்பிட்டு வருகிறோம். கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தை சரியாக பயன்படுத்தி எப்படி சுவையாக சமைப்பது பற்றி பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருள்கள்:-
பச்சரிசி -1 கப்
உருளைக்கிழங்கு -2
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
தனியாத்தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா -1/2 ஸ்பூன்
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
நெய் -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு

செய்முறை:-
முதலில் பச்சரிசியை சுத்தமாக கழுவி தண்ணீரில் 3 முறை வரை அலசி கொள்ளவேண்டும். பிறகு அரிசியில் சிறிதளவு உப்பு சேர்த்து சாதத்தை வடித்து கொள்ளவும். சாதம் உதிரியாக கிடைக்க ஒரு பாத்திரத்தில் துண்டை போட்டு சாதத்தை அதன் மேல் கொட்டி ஆற விட வேண்டும். பிறகு உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் வடித்த அரிசி கொட்டி ஒன்றுடன் ஒன்று சேருவது போல நன்றாக கிளறவும். கடைசியில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான உருளை கிழங்கு ரைஸ் தயார்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>