ஐபிஎல் 2018-ஏலத்தில் நடந்த ஆச்சர்யங்கள்

by Isaivaani, Jan 28, 2018, 07:34 AM IST
பெங்களூரில் நடைபெற்ற முதல்நாள் ஏலத்தில் சில ஆச்சர்யமான சம்பவங்கள் நடந்தேறின... அவற்றுள் சிலவற்றை சுருக்கமாக காண்போம்...
PC- BCCI
முதல் ஆச்சரியம் ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டோனியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வினை தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி முயற்ச்சிக்கவில்லை.  இந்த முறை அவர் பஞ்சாபிற்கு செல்கிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை 7.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஐபிஎல் 2018ன் முதல் ஏலம் ஷிகர் தவான். அவர் 5.2 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் விற்கப்பட்டார். ஆனால் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் RTM அட்டையை பயன்படுத்தி அவரைத் தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்டது. அதனால் மீண்டும் ஆரஞ்ச் ஆர்மியில் ஐக்கியமாகிறார் ஷிகர்.
கிரிக்கெட்டை பொறுத்தவரை அதிரடி என்றாலே பெரும்பாலான ரசிகர்களுக்கு கிறிஸ் கெயிலின் முகம்தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். ஆனால் இந்த வருட ஏலத்தில் பங்கேற்ற எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை. இதை ஆச்சர்யம் என்பதை விட கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவையும் எந்த அணியும் எடுக்கவில்லை. முதல் முறையாக மும்பை அணி மலிங்கா இல்லாமல் விளையாடப் போகிறது. அதுபோல் ஹர்பஜன் சிங்கும் ஆரம்பகாலத்திலிருந்தே மும்பை இன்டியன்ஸில் விளையாடி வருகிறார், தற்போது அவர் 2 கோடி ரூபாய்க்கு சி.கே.கே.க்கு செல்கிறார்.
கடந்த வருடத்தில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வந்த பிரெண்டன் மெக்கலம், இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடப் போகிறார. இவரை வாங்குவதற்காகவே கெயிலை ஓரங்கட்டியிருக்கலாம் என பேசப்படுகிறது.
ஆனாலும் இன்றைய ஏலத்தில் கெயில் மறுபடியும் ஏலத்திற்கு வரலாம் என ஏதிர்பார்க்கப் படுகிறது.
இந்திய அணியில் ஒருநாள் மற்றும் 20-20 போட்டிகளில் அஸ்வினையே ஓரங்கட்டிவிட்டு, அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ள கேப்டன் விராட் கோலியின் செல்லப்பிள்ளை குல்தீப் யாதவ் ரூ. 5.8 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். கிறிஸ் லைன் மீண்டும் கொல்கத்தாவிற்காக விளையாட போகிறார், அவரை அந்த அணி 9.6 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஷேன் வாட்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
கடந்த முறை பெங்களூருக்காக விளையாடிய கே.எல் ராகுலை 11 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் 2018-ல் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கின் விலை இந்த வருடம் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. அவர் இந்திய அணிக்காக விளையாடிய நேரங்களில் அவருக்கு 14 கோடி, 16 கோடி ரூபாய் வரை மதிப்பு இருந்தது, 
ஆனால் இந்த முறை அவரது தாயகமான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை வெறும் 2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. மற்றொரு மிகப்பெரிய விலை வீழ்ச்சி சம்பவமும் இந்த வருட ஏலத்தில் நடந்தேறியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இதுவரை விலையாடிய அதிரடி வீரர் கௌதம் காம்பீர் இந்த வருடம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால்  ரூ. 2.8 கோடிக்கு  வாங்கப்பட்டார், யுவராஜ்சிங்கை போல் காம்பீரும் தனது தாயக அணிக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஐபிஎல் 2018-ஏலத்தில் நடந்த ஆச்சர்யங்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை