குங்பூ வீரனாக மாறிய எலி – சுருண்டது விஷப்பாம்பு

by T.C.Gnanavel, Apr 2, 2019, 10:34 AM IST

எலி ஒன்று விஷப்பாம்பின் பிடியில் இருந்து எஸ்கேப் ஆகும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. வலிமையானவனே உயிர்பிழைப்பான் என்பது விலங்குகள் உலகில் எழுதப்படாத நியதியாகும். அதனை உடைக்கும் வகையில் இந்த காட்சி அமைந்துள்ளது.

பசியில் வாடிய விஷப்பாம்பு எளிதான இரையாக எலியை எண்ணி அருகில் சென்றது. அதனை கவ்வி பிடிக்க முயன்ற போது, குங்பூ வீரனைப் போல் தாவிய எலி, பாம்பின் தலையில் உதைவிட்டு எகிறிச் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த தாக்குதலால் நிலைகுலைந்த பாம்பு, பின்னர் தடுமாற்றத்துடன் நகர்ந்து சென்றது. வலைத்தளத்தில் வெளியான இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.


Leave a reply