மாதம் ரூ.3000 ஓய்வூதியம்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...?

What is PM Shram Yogi Maan-dhan and How to Apply

by Loganathan, Aug 28, 2020, 12:20 PM IST

மத்திய அரசின் இந்த திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வயது முதுமையில் அதாவது 60 வயதிற்கு பின் மாதம் ரூபாய் 3000 வருவாயை ஏற்படுத்தும் திட்டமாகும். இதுவும் ஒரு விருப்பத்தின் அடிப்படையில் பங்களிப்பு முறை திட்டமாகும் . கட்டணத்தில் பாதியை நீங்களும் மீதி பாதியை மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளும் .

அமைப்புசாரா தொழில் என்றால் என்ன ?

அரசு மற்றும் அரசு உதவி பெறும் அமைப்பை சாராத நிறுவனங்கள் சமுதாயத்தில் உள்ள அடிப்படை வேலையை செய்பவர்கள் இதில் அடங்குவர்.

யாரெல்லாம் பயன்பெறாலாம் ?

அமைப்புசாரா தொழில் செய்யும் அனைவரும் இந்த திட்டத்தில் பங்கு பெறலாம். உதாரணமாக வீட்டு வேலை செய்பவர்கள், தள்ளு வண்டி வியாபாரம் செய்பவர்கள் , இரவு நேர உணவு வியாபாரம் செய்பவர்கள், சுமை தூக்குபவர்கள் , செங்கல்கள் சூலையில் வேலை செய்பவர்கள், துணி வேலை செய்பவர்கள் , குப்பை பொருக்குபவர்கள் , நிலமில்லா கூலிகள் , கட்டிட வேலை செய்பவர்கள், கை வினைஞர்கள் , பீடி வேலை செய்பவர்கள் , தோல் சார்ந்த வேலை செய்பவர்கள் மற்றும் ஒலி , ஒளி அமைப்பவர்கள் போன்றோர் இந்த திட்டத்தில் பங்கு பெறலாம்.

மேலும் அவர்களின் மாத வருமானம் ரூபாய் 15,000 மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதிகள்

1. அவர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. அவர்கள் NPS ( National Pension Scheme ) , ESIC ( Employee State Insurance Corporation ) , EPFO ( Employee provident Fund Corporation ) போன்ற திட்டங்களில் பங்கு பெறாதவர்களாக இருக்க வேண்டும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

1. 60 வயதில் குறைந்த பட்ச ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 3000 கிடைக்கும்.

2. பயனாளி இறந்து விட்டால் அவரின் மனைவிக்கு மட்டுமே 50% ஓய்வூதிய தொகை கிடைக்கும்.

3. 60 வயதுக்குள் பயனாளி இறந்து விட்டால் அவரின் மனைவி அந்த திட்டத்தை தொடரலாம்.

எவ்வளவு தொகை கட்ட வேண்டும்?

உதாரணமாக ஒருவர் 29 வயதில் இந்த திட்டத்தில் இணைந்தால் அவருக்கான மாத கட்டணம் ரூபாய் 200 அதில் பாதி தொகையை ரூபாய் 100 பயனாளி செலுத்த வேண்டும். மீதி 100 மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

அருகில் உள்ள CSC மையத்தின் மூலம் தொடங்களாம்.

You'r reading மாதம் ரூ.3000 ஓய்வூதியம்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை