விஜய், முருகதாஸ் பட அறிவிப்பு வெளிவராததற்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்..

விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வராமல் காத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படத்தை வெளியிட உள்ளதாகப் பட நிறுவனம் அறிவித்திருக்கிறது, இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் அதாவது அவர் நடிக்கும் 65வது படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை.ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் பரவின, தமன் இசை அமைக்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. தமனும் விஜய் படத்திற்கு இசை அமைக்க உள்ளது பற்றி ரொம்பவே சிலாகித்து மெசேஜ் போட்டார்.

இப்படம் துப்பாக்கி 2ம் பாகமாக உருவாகவிருப்பதாகக் கூறப்பட்டது. இந்த தகவல் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சன் பிக்சர்ஸும், முருகதாஸும் குறிப்பிட்ட நாளில் பட அறிவிப்பு வரும் என்று அறிவித்திருந்தனர். ரசிகர்களும் அறிவிப்பு வந்தவுடன் அதை டிரெண்டிங் செய்ய ஆவலாக இருந்தனர், ஆனால் அறிவிப்பு வரவில்லை. அதுபற்றி காரணம் புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.விஜய் 65 அறிவிப்பை விஜய்யே நிறுத்தி வைத்திருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.

அதாவது விஜய்யிடம் முருகதாஸ் படத்தின் பாதி கதையைத் தான் கூறி இருக்கிறாராம். இன்னும் பாதி கதை கூற வேண்டி உள்ளதாம். எனவே மீதி கதையைச் சொன்னபிறகு அறிவிப்பு வெளியிட்டால் போதும் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிவிட்டாராம். இதனால் அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளதாம்.விஜய் 65ல் காஜல் அகர்வால் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தமன்னா நடிக்க உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :