ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப்பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.இந்த வாரியமானது கடந்த 2012 முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை இனம் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு என அடையாள அட்டைகளையும் வழங்கி வருகிறது.
மேலும், திருநங்கைகள் சமூகத்தில் சக மனிதர்களைப் போல் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் நலத்திட்ட உதவிகளைத் தமிழக அரசு வழங்குகிறது.
*திருநங்கைகள் சுயதொழில் துவங்க ரூ.20 ஆயிரம் வரை கடனுதவி,
*தையல் இயந்திரங்கள் வழங்குதல்,
*சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காகச் சென்னைக்கு வரும் திருநங்கைகள் தங்குவதற்கென தற்காலிக விடுதி,
*அடையாள அட்டை
*இலவச பட்டா வழங்குதல்,
*வீடு வழங்கும் திட்டம்,
*சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல்,
*ரேஷன் கார்டு வழங்குதல்
போன்ற திட்டங்கள் இந்த நல வாரியத்தால் செயல்படுத்தப்படுகிறது .
40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ரூபாய் 1000 வீதம் மாதந்தோறும் வழங்கப்படும்.