PMUY (Pradhan Mantri Ujwala Yojana ) என்ற திட்டம் 2016 மே 1 ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் 50 மில்லியன் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு LPG எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டமாகும்.இந்த திட்டத்தைச் செயல்படுத்த 80 மில்லியன் தொகை ஒதுக்கப்பட்டது.திட்டத்தின் தொடக்க ஆண்டின் இலக்காக 15 மில்லியன் இணைப்பு நிர்ணயிக்கப்பட்டது ஆனால் 22மில்லியன் குடும்பங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டது.
2017 ன் படி 30 மில்லியன் குடும்பங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டது அதில் 44 சதவீதம் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.2018 ல் 50 மில்லியன் குடும்பங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டது.இந்த திட்டமானது 2020 மார்ச் மாதம் முடிவடை இருந்த நிலையில் கொரோனா தொற்றின் காராணமாக இந்த திட்டத்தின் முடிவு காலம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த திட்டத்தில் இன்னும் பயன் படாதவர்கள் விரைவில் இணைந்து விடுங்கள்.