திட்டம் :
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாகக் கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
• தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.
• இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
• இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் 72000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான ஒப்புதலைக் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறவேண்டும்.
குடும்பத் தலைவர் மற்றும் அவரது சட்டப்பூர்வமான குழந்தைகளுக்கும் இந்த காப்பீடு பொருந்தும்.
அவரின் குழந்தைக்குத் திருமணம் அல்லது 25வது வயது இதில் எது முன்னரோ அது வரை காப்பீடு பெறலாம்.
பயன்கள் :
• அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்குக் கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
• இந்த திட்டத்தில் மருத்துவச் சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோய் கண்டறியும் சோதனைகளும் [இணைப்பு F] மற்றும் தொடர் சிகிச்சைகளும் [இணைப்பு E] வழங்கப்படுகின்றன.
உதவி மையம் :
• இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைப்பேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.