மனிதர்களின் மதியை மயக்கும் மதி கெட்டான் சோலை!!

Mathi kettan solai

by Logeswari, Sep 11, 2020, 20:39 PM IST

தமிழ் திரைப்படமான குணா திரைப்படம் யாவரும் அறிந்ததேகுணா திரைப்படம் என்றாலே ஒரு உண்மையான காதல் காவியம்என்பது மட்டுமே நினைவிற்க்கு எட்டும்.குணா திரைப்படத்தின் படபிடிப்பு முழுவதும் கொடைக்கானலில் இடம்பெற்றது.இதனால் அவ்விடத்திற்க்கு குணா குகை என்ற பெயர் பெற்று சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.

கொடைக்கானலில் சுற்றி பார்க்க்க ஏராளமான இடங்கள் இயற்க்கையோடு எழில் மிகுந்து காணப்படுகின்றது. குணா குகைக்கு அருகில் பெரிஜாம் என்ற ஏரி 100 வருடங்களாக இருந்து வருகிறது.அவ்வேரியில் மதிகெட்டான் சோலை என்ற இடம் மர்மமான முறையில் தோற்றம் அளிக்கின்றது.

கொடைக்கானலில் சுற்றி உள்ள மக்கள் இச்சோலைக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் மீறி சென்றால் மரணம் நிச்சயம் அல்லது நாம் யாரென்று மறந்து மதி கலங்கிய நிலைக்கு தள்ளப்படும் சுழல் உண்டாகும் என்று இதுபோல் திடிக்கிடும் தகவல்களை மிகுந்த அச்சத்துடன் வெளியிட்டனர்.மதிகெட்டான் சோலையின் தோற்றமானது எவ்வகை சூரிய ஒளியும் உள்ளே செல்ல விடாமல் தடுப்பது போல் மரங்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும்.

இச்சோலையை மக்கள் கிறுக்கு காடு என்றும் கூறுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் மக்கள் தன்னிடம் பேச ஒருவரும் இல்லை என்றாலும் வாழ்க்கையை வாழ்ந்திட முடியும் ஆனால் ஒருவரால் கைபேசி இல்லாமல் வாழ இயலாது இதுவே இக்காலகட்டத்தின் விதியாகும். இதுபோன்றுதான் மதிகெட்டான் சோலை தனிமை, மற்றும் சிக்னல்யின்மை போன்ற காரணங்களால் சூழப்பட்டு அன்றாட தேவைகள் முடக்கப்பட்டதால் மனிதர்களுக்கு பைத்தியம் பிடிப்பது போல் தோன்றும் என்பது இயல்பு என்பது ஒரு ஆராய்ச்சியின் உண்மை.

சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்றுவரை சோலையில் ஒரு முருகன் சிலை இருப்பதாகத் தகவல் கிட்டியது. ஆனால் இன்றுவரை மனிதர்களின் கைகளுக்கு பிடிபடவில்லை. சோலையில் உதிரும் பூக்களின் நறுமணம் மிகவும் வலிமை வாய்ந்தது அம்மணம் எங்கும் நீங்காமல் சோலையிலே சுற்றிக்கொண்டிருக்கும். வாசனையினால் மனிதனின் மதி மயங்க வாய்ப்புள்ளது.

இச்சோலையில் உள் சென்றவர்கள் மரணமடைந்தோ அல்லது மதி கலங்கியோ வெளியே வருவதுதான் இச்சோலையின் பெருமை ஆகும். இதனால் இச்சோலைக்கு செல்ல அஞ்சுகின்றனர் மக்கள்…….

You'r reading மனிதர்களின் மதியை மயக்கும் மதி கெட்டான் சோலை!! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை