குழந்தைகளுக்கான தடுப்பூசி ! குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொள்ளலாம்!

Vaccine for children! Find out via SMS!

by Loganathan, Sep 12, 2020, 12:01 PM IST

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS - திட்டம்

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு SMS மூலம் நினைவூட்டும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அது குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. செல்போன் மூலம் பதிவு செய்தால் போதும், தடுப்பூசி போடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ் மூலம் நினைவூட்டப்படும். இதற்கு national vaccine reminder என்று பெயர்.

எப்படி பதிவு செய்வது?

உங்களுடைய செல்போனின் மெசேஜ் பாக்ஸில் Immunize என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு உங்கள் குழந்தையின் பெயரை டைப் பெய்து விட்டு, ஒரு ஸ்பேஸ் விட வேண்டும். பின்னர் உங்கள் குழந்தையின் பிறந்த தேதியை டைப் செய்து 566778 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு, Immunize Harish 10-09-2015 என்று டைப் செய்து அனுப்பினால், உடனே குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று முதல்கட்ட தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போட வேண்டும் என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உங்கள் செல்போனுக்கு வந்து சேரும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தடுப்பூசி போடுவது குறித்து நினைவூட்டப்படும்.

தடுப்பூசி போடுவதற்கான அட்டவணை

வயது தடுப்பூசியின் பெயர்

குழந்தை பிறந்தவுடன் பிசிஜி போலியோ சொட்டு மருந்து ஹெப் - B

6 வாரங்கள் DPT 1 போலியோ சொட்டு மருந்து – ஹெப் B 2வது

10 வாரங்கள் DPT 2 போலியோ சொட்டு மருந்து

14 வாரங்கள் DPT 3 போலியோ சொட்டு மருந்து

6 – 9 மாதங்கள் போலியோ சொட்டு மருந்து ஹெப் – B 3வது

9 மாதங்கள் மீஸல்ஸ் தடுப்பூசி (அம்மை)

15 – 18 மாதங்கள் MMR (Measles,Mumps, Rubella) 1வது பூஸ்டர் போலியோ சொட்டு மருந்து

5 வயது DPT 2வது பூஸ்டர் போலியோ சொட்டு மருந்து

10 வயது TT (டெட்டனஸ்) 3வது பூஸ்டர் ஹெப் - B - பூஸ்டர்

15 – 16 வயது-TT (டெட்டனஸ்) 4வது பூஸ்டர்

You'r reading குழந்தைகளுக்கான தடுப்பூசி ! குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொள்ளலாம்! Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை