இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது.இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பாராக்கப்படுகிறது. தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தை விட உயர்ந்திருந்தாலும் , நேற்றைய விலையை விட சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4960க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து , கிராமானது 4945க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4945
8 கிராம் ( 1 சவரன் ) - 39560
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5208க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 15 குறைந்து , கிராமானது ரூபாய் 5193 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5193
8 கிராம் - 41544
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது இன்று கிராமிற்கு 50 பைசா குறைந்து , கிராம் 71 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 71000 விற்பனையாகிறது.