இனி ஜேகே டயர்ஸை ( JK tyres ) அமேசான் தளத்தில் வாங்கலாம் !

by Loganathan, Sep 17, 2020, 17:06 PM IST

இந்தியாவில் ரேடியல் டயர் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் நிறுவனம் ஜேகே டயர்ஸ் ( JK tyres industrial ltd ) ஆகும்.இந்நிறுவனம் இணைய வழி வர்த்தக தளமான அமேசான் உடன் கைகோர்த்து உள்ளது. தங்களின் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கவும் , அவர்களின் இருப்பிடத்திற்கே பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த உறவை ஏற்படுத்தி உள்ளது நிறுவனம்.

ஜேகே டயர்ஸின் , அமேசானுடனான இந்த கூட்டமைப்பு கடந்த 1 ஆகஸ்டு 2020 ல் நடந்தது . மேலும் இந்த தளத்தின் மூலம் இருசக்கர மற்றும் மகிழுந்து ( car ) போன்ற வாகனங்களுக்கான டயர்களையும் பெறலாம்.அமேசானின் ப்ரைம் டே விற்பனை நாளான ஆகஸ்ட் 6-7 தேதிகளில் ஜேகே டயர்ஸ்ம் மிகப்பெரிய விற்பனையைப் பதிவு செய்தது .மேலும் அறிய www.amazon.in என்ற தளத்தில் சென்று ஜேகே டயர்ஸ் என்று தேடலின் மூலம் பெறலாம்.

READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை