பி.எட். படிப்பு இன்று முதல் சேர்க்கை !

B.Ed. Admission to the course today!

by Loganathan, Oct 1, 2020, 16:09 PM IST

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, வியாழக்கிழமை (அக்டோபர் 1) முதல் தொடங்குகிறது.2021-ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு, வியாழக்கிழமை (அக்டோபர் 1), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (www.tnou.ac.in) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பி.எட் சிறப்புக் கல்வி படிப்பானது பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளும், தமிழ், ஆங்கிலம், ஆகிய இருமொழிகளும் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு பயின்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறுவதற்குக் கடைசி நாள்: 31.10.2020.

மேலும் விவரங்களுக்கு 044 - 2430 6617, 8428575967, 9841685515 ஆகிய எண்களை அணுகலாம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை