மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் திங்களன்று ஆகஸ்ட் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.இதில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம், உள்கட்டமைப்பு, கட்டுமானம் உள்ளிட்டுத் தொழில்துறைகளின் உற்பத்தி தொடர்ந்து ஆறாவது மாதமாகச் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, 2020 ஆகஸ்டில் 8.0 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, 2020 ஆகஸ்டில் சுரங்கத் தொழில் உற்பத்தி 9.8 சதவிகிதமும், தயாரிப்பு தொழில்கள் 8.6 சதவிகிதம், மின்சாரத் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவிகிதம், அத்தியாவசிய பொருட்கள் தொழில்துறை 11.1 சதவிகிதம், மூலதன பொருட்களின் உற்பத்தி 15.4 சதவிகிதம், நடுத்தர பொருட்கள் உற்பத்தி 6.8 சதவிகிதம், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தொழில் 2.3 சதவிகிதம் என வீழ்ச்சி கண்டுள்ளது.
இதேபோல, நுகர்வோர் சில்லறை விலை பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 2020 செப்டம்பரில் 7.34 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.நுகர்வோர் உணவு விலைப் பணவீக்கமும் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 6.69 சதவிகிதம் உயர்ந்துள்ளது.