அதிக வாடிக்கையாளர்கள் : ஜியோ தான் நம்பர் ஒண்ணாம்...

Jio continues to top the list of mobile phone subscribers.

by Balaji, Oct 15, 2020, 13:13 PM IST

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட செல்போன் நிறுவனமாக ஜியோ முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.ஜியோ நிறுவனத்தின் வருகை தொலைத் தொடர்பு துறையில் பல மாற்றங்கள் நிகழ் காரணமாக இருந்துள்ளது . பல நிறுவனங்கள் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் காணாமல் போயின.

தற்போது தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் ஜியோ , ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குக் கடுமையான சவாலாக அமைந்துள்ளது.இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இணைத்து, 40 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்து முதல் இடத்தில் ஜியோ திகழ்கிறது.

தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் டிராய்இது குறித்து
வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இது தெரிய வந்துள்ளது. ஜியோவின் ஒட்டு மொத்த தொலைத் தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 116 கோடியாக இருந்தது. ஜூலை மாதத்தில் 40 லட்சம் சந்தாதாரர் கள் அதிகமானதால் 116.4 கோடியாக உயர்ந்தது.இதுவே தொலைப்பேசி இணைப்புகள் கடந்த ஜூன் மாதத்தில் 114 கோடியாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 114.4 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் முறையே 61.9 கோடியாகவும், 52.1 கோடியாகவும் உள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.

இந்த கணக்கீடு மாத சந்தாதாரர்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.பிக்ஸ்டு லைன் இணைப்புகளிலும் ஜியோ தான் முன்னிலையில் உள்ளதாக டிராய் கூறியுள்ளது.தனியார் நிறுவனமான ஜியோ வளர்ந்து வரும் அதே நேரத்தில், பொதுத்துறை நிறுவனமான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.தற்போது இந்திய மொபைல் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 35.03% பங்கினை கொண்டு, 40,08,03,819 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

ஜூலை மாதத்தில் ஏர்டெல் 32.6 லட்சம் மற்றும் பி எஸ் என் எல் 3.88 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.ஆனால் வோடபோன் ஐடியா ஜூலை மாதத்தில் 37 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. எம் டி என் எல் நிறுவனம் 5,457.l வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. மொபைல் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் பிராட்பேண்ட் இணைப்புகள் ஜூன் மாதத்தில் 69.82 கோடியிலிருந்து, 70.54 கோடியாக ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளthu டிராய் தெரிவித்துள்ளது.

இந்த பிராட்பேண் இணைப்பிலும் ரிலையன்ஸ் ஜியோ தான் முதலிடம் வகித்துள்ளது. ஜியோ நிறுவனம் 40.19 கோடி வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 15.57 கோடி வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 11.52 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன.

You'r reading அதிக வாடிக்கையாளர்கள் : ஜியோ தான் நம்பர் ஒண்ணாம்... Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை