இளம்பெண்ணை ரோட்டில் தடுத்து நிறுத்தி நிர்வாண போஸ்.. செருப்பை கழட்டி அடித்தும் பலனில்லை.

by Nishanth, Oct 28, 2020, 20:36 PM IST

ரோட்டில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி ஒரு வாலிபர் நிர்வாண போஸ் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தன்னுடைய செருப்பை கழட்டி அந்த வாலிபரை அடித்தார். ஆனால் அதற்குப் பின்னரும் கவலைப்படாத அந்த வாலிபர் இளம்பெண்ணை கட்டிப் பிடித்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பெங்களூருவில் உள்ள ஒரு குறுகலான ரோட்டில் இந்த சம்பவம் நடந்தது.பெங்களூருவில் உள்ள டி ஜே ஹள்ளி என்ற இடத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் அதிகாலையில் ஒரு இளம்பெண் அங்குள்ள ஒரு குறுகலான ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு வாலிபர் திடீரென அந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தினார். பின்னர் தனது ஆடைகளைக் களைந்து அந்த இளம்பெண் முன் நிர்வாண போஸ் கொடுத்தார். இதில் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.ஆனாலும்பயப்படாமல் அந்த வாலிபரை இளம்பெண் தனது செருப்பைக் கழட்டி அடித்தார். அடி கிடைத்த பின்னரும் அந்த வாலிபர் பயப்படவில்லை, கவலைப்படவும் இல்லை.

தொடர்ந்து அந்த இளம்பெண்ணை கட்டிப் பிடித்து விட்டு அந்த ஆசாமி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த வாலிபரை விடக்கூடாது என தீர்மானித்த அந்த இளம்பெண், அவரை விடாமல் பின் தொடர்ந்து ஓடினார். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பினார். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூக இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை கண்டுபிடித்த போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை