பட்டய கணக்காளர் அடிப்படை பயிற்சிக்கு விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்தியாவிற்கு தற்போது, 10 லட்சம் பட்டய கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர்.இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது பட்டய கணக்காளர்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் பட்டய பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலே தமிழகத்தில் தான் முதன்முறையாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. டிச., 23ம்தேதி துவங்கி, ஏப்., 2021வரை நடக்கும் பயிற்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களைச் சந்தித்துப் பதிவு செய்து கொள்ளலாம்.
தினமும், காலை, 6:30 முதல், 8:30 மணி வரை, மாலை, 5:30 முதல், 8:30 மணி வரை வகுப்பு நடக்கும்.இந்த பயிற்சியானது மூன்று வகைகளில் அளிக்கப்படுகிறது. அதாவது இந்த பாடத்திட்டத்திற்குப் புதிதாக இணைபவர்களுக்காக அடிப்படை பாட வகுப்பு, இடைநிலை பாட வகுப்பு மற்றும் இறுதி பாட வகுப்பு எனப் பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, www.sirc-icai.org/view-batches.php என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது, 96771 26011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.