தம்தரியில் நீடிக்கும் மூடநம்பிக்கைகள்.. குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்களின் வயிற்றில் நடக்கும் சாமியார்கள்..

by Logeswari, Nov 23, 2020, 20:23 PM IST

தம்தரி மாவட்டத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்களின் வயிற்றில் சாமியார்கள் நடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்தரி மாவட்டத்தில் வருடம் தோறும் தீபாவளி முடிந்த முதல் வெள்ளி கிழமையில் ஒரு சடங்கு தவறாமல் நடந்து வருகிறது. இந்த சடங்கை அங்கு வாழும் மலை வாழ் மக்களும் பெரிதும் நம்பி வருகின்றனர். அதிக காலங்களாக குழந்தை இல்லாத பெண்மணிகளை தரையில் படுக்க வைத்து அவர்கள் மேல் 10க்கும் மேற்பட்ட சாமியார்கள் நடந்து செல்கின்ற கொடுமை ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இவ்வாறு செய்தால் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என்று ஆணி தனமாக நம்புகின்றனர்.

கொரோனா காலம் என்று கூட பயமில்லாமல் இந்த வருடமும் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் யாரும் சமூக இடைவெளி இல்லாமல் மூக கவசம் கூட அணியாமல் இருந்ததாக வெளியான வீடியோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமூக இடைவெளி பற்றின விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். அது மட்டும் இல்லாமல் எந்த மதமும் வலியை ஏற்படுத்தும் விதமாக எந்த செயலையும் செய்ய சொல்வதில்லை. அதனால் பெண்கள் கண் மூடி தனமாக இந்த மூடநம்பிக்கைகளை செய்வதை கைவிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்..

You'r reading தம்தரியில் நீடிக்கும் மூடநம்பிக்கைகள்.. குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்களின் வயிற்றில் நடக்கும் சாமியார்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை