கடலை மாவு பரோட்டாவை சுவையாக எப்படி பண்ணனும் தெரியுமா??

by Logeswari, Nov 23, 2020, 20:46 PM IST

பராத்தா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்த உணவு என்று கூறலாம். மைதாவில் செய்த பராத்தா உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அறிந்தும் அதனையே மனம் தேடும். இதனால் எந்த தீங்கும் ஏற்படுத்தாத கடலை மாவில் எப்படி பராத்தா செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-
கடலை மாவு-1 கப்
கோதுமை மாவு-1 கப்
மஞ்சள் தூள்-தேவையான அளவு
மிளகாய் தூள்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
சீரகம்-1/2 தேக்கரண்டி
வெந்தய கீரை-1 தேக்கரண்டி
சீரக விதைகள் -1/2 தேக்கரண்டி
பெருங்காயம்-தேவையான அளவு

செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, தேவையான அளவு பெருங்காயம், கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் போன்ற எல்லா பொருள்களையும் கலவையாய் கலந்து கொள்ளவும். தனியாக கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சாப்பத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிசைந்த கோதுமை மாவினை உருண்டைகளாக திரட்டி, ரொட்டி போல் தட்டையாக தேய்த்து கொள்ளவும். தட்டையாக தேய்த்த கோதுமை மாவில் கடலை மாவு கலவையை சேர்த்து உள்ளே பில்லிங் போல் வைத்து வெளியே வராமல் மெதுவாக மீண்டும் தேய்க்க வேண்டும்.

பிறகு பராத்தாவை சூடான தவாவில்போட்டு இரண்டு பக்கங்களும் பொன்னிறம் ஆகும் வரை வேக வைக்க வேண்டும். சூடாக தயாரான பராத்தாவிற்கு மிகவும் பொருத்தமான தேங்காய் சட்னியுடன் சுவைத்து பாருங்கள் சுவையில் மெய்மறந்து காணுங்கள்..

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்