இந்த காலத்தில் இப்படி ஒரு காதலர்களா?? திருமணத்தை சிம்பிளாக நடத்தி 200 ஏழைகளுக்கு உதவி செய்த காதல் ஜோடி..!

by Logeswari, Dec 1, 2020, 14:17 PM IST

அமெரிக்காவில் காதல் ஜோடி அவர்களது திருமணத்தை எளிமையாக நடத்தி, 6 லட்சம் செலவில் 200 ஏழைகளுக்கு இலவசமாக உணவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த இல்லினாய்ஸ் என்ற இடத்தில் பில்லி லீவிஸ் மற்றும் எமிலி பக் என இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் பல வருடங்களாக ஒருத்தரை ஒருத்தர் உண்மையாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்தது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் குறித்த தேதியில் இவர்களால் திருமணம் செய்து கொள்ள இயலவில்லை.

கொரோனாவால் இவர்களது திருமணம் 2 முறை தள்ளி போகியது. தற்பொழுது ஓரளவுக்கு கொரோனாவின் ஆட்டம் கைக்குள் வந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். அது மட்டும் இல்லாமல் இவர்கள் வாழ்க்கையில் ஓர் சிறப்பான குறிக்கோளை எடுத்து அதனை வெற்றிகரமாக முடித்தும் காட்டியுள்ளார். திருமணம் என்றால் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு நாள். இதனால் அந்த நாளை அதிக செலவுகள் செய்து சிறப்பாக கொண்டாடி வருவோம். ஆனால் இந்த இளஞ்சோடிகள் மிக எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை 200 ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்து மகிழ்ந்தனர்.

இந்திய பணமதிப்பில் சுமார் 4 லட்சத்தை செலவு செய்து உதவி செய்துள்ளனர். இதனை அவர்களது இன்ஸ்டாவில் பதிவிட்டு எங்கள் வாழ்க்கையை ஆடம்பரமாக துவக்குவதை காட்டிலும் சிறப்பான ஒன்றை செய்ததில் மனம் நிறைவு பெற்றுள்ளது எனவும் இப்படி ஒரு மனைவி கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும். எமிலி மிகவும் சமூக ஆர்வம் கொண்டவர் என்று பில்லி அவரது மனைவியை புகழ்ந்து கூறியுள்ளார். இந்த இளஞ்ஜோடிகளை பற்றி உலகம் முழுவதும் பரவலாய் பேசப்பட்டு வருகிறது.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை