அரசு கல்லூரிகளில் பி.எட் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்!

by Loganathan, Dec 2, 2020, 19:27 PM IST

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும், கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கான, பி.எட்., பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை, www.tngasaedu.in என்ற இணையதளத்தில், வரும் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் போது, தங்கள் விருப்ப வரிசைப்படி, கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். தங்களின் சான்றிதழ்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விபரங்கள், எந்தெந்த கல்லூரிகளில், என்ன பாடப் பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இணையதளத்தில் பதிவு செய்வதில், ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவர்கள், 044 - 2235 1014, 2235 1015, 2827 8791 ஆகிய தொலைப்பேசி எண்களில், காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு விபரம் அறியலாம்.

மேலும் care@tngasaedu.org, tndceoffice@gmail.com என்ற, E- mail முகவரி வழியே, சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம். மேலும் இதற்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/pr011220_920.pdf

You'r reading அரசு கல்லூரிகளில் பி.எட் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை