நீலகிரி மலை ரயில் பயண கட்டணம் 3,000 ரூபாயா? ரயில்வே நிர்வாகம் மறுப்பு

by Balaji, Dec 7, 2020, 20:58 PM IST

நீலகிரியில் இயக்கப்பட்டு வரும் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது இதுவரை 30 30 ரூபாயாக இருந்த பயண கட்டணம் இனி ஒரு நபருக்கு 3000 ரூபாய் எங்கிருந்து வைக்கப்பட்டுள்ளது. இதுதான் ரயில்வே தனியார் மயமாக்கப்பட்ட தன் சாதனை என்ற ரீதியில் சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு பதிவு உலா வந்தது இந்த பதிவை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் இது தவறான செய்தி என்று விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மலை இரயில் தனியார் வசமானது என்பது தவறான பதிவு. ரயில்வே துறையின் விதிகளின்படி எந்த ஒரு தனி நபரும் ஒரு ரெயிலையோ ஒரு இரயில் பெட்டியை full tariff rate (FTR ) என்ற அடிப்படையில் ஒரு குழுவிற்கோ, சுற்றுலா அல்லது திருமண நிகழ்ச்சிகாக பணம் செலுத்தினால் ரயில்வே துறை அவர்களுக்கு ஒரு ரெயிலை அல்லது ஒரு இரயில் பெட்டியை இயக்கும். இது chartered trip என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு ரயில்வே இது போல் பல டிரிப்புகள் இயக்கப்பட்டுள்ளது . அந்த அடிப்படையிலேயே டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்தின்படி இயக்கப்பட்டது.

இதை ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு வைரலாகி கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தவறான, புரிதல் இல்லாது இடபட்ட பதிவு ஆகும். இந்த ஒரு சார்ட்டர்ட் டிரிப்பிற்கும் இரயில்வேயின் வழக்கமான மலை ரயில் சேவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரயில்வேயின் வழக்கமான சேவைகள் கோவிட்-19 ஐ கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டு உள்ளது. இதை இயக்க உரிய அனுமதி வந்த பிறகு பொது மக்களுக்காக ஏற்கனவே இருந்த கட்டணத்தின் அடிப்படையில் மலை ரயில் தொடர்ந்து இயக்கப்படும்.

You'r reading நீலகிரி மலை ரயில் பயண கட்டணம் 3,000 ரூபாயா? ரயில்வே நிர்வாகம் மறுப்பு Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை