மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான ஆர்.டி.ஜி.எஸ். வசதி இன்று முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ஒரு வங்கிக் கணக்குகளில் இருந்து மற்றொரு கணக்குக்குப் பெரிய அளவிலான தொகையை ஆன்லைன் மூலம் முறையில் உடனடியாகப் பரிமாற்றம் செய்ய ஆர்.டி.ஜி.எஸ். (RTGS) என்ற வசதி நடைமுறையில் உள்ளது.இப்போது இந்த வசதியை வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் நிலை இருந்தது.
ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதியை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் அளிப்பதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. இதன்படி இன்று முதல் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் ஆர்.டி.ஜி.எஸ். வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.