ரஷ்யா: ரஷ்யாவில் இளம்பெண் சூட்கேஸை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்றாலே மணமகன், மணமகள் என்றுதான் எல்லாருக்கும் நியாபகம் வரும். ஆனால், வெளிநாடுகளில் சில விநோதங்களாக திருமணங்கள் அவப்போது அறங்கேறி தான் வருகிறது. தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட நபர், பொம்பையை திருமணம் செய்துகொண்ட நபர் போன்ற செய்திகள் சமீபத்தில் வெளியாகின.இந்நிலையில், ரஷ்யாவில் ரெய்ன் ஜார்டன் என்ற 24 வயது இளம்பெண் சூட்கேசை திருமணம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரெய்ன் ஜார்டன் கூறுகையில், எனக்கு ஒரு ஆண் மீதும் விருப்பம் இருந்தது. ஆனால் தற்போது சூட்கேஸ் மீது காதல் வயப்பட்டுள்ளேன். அதனால் தான் அதனை திருமணம் செய்துகொண்டேன். சிறுவயது முதலே பொருட்களின் மீது தனக்கு ஈர்ப்பு உண்டு என்றார். தன்னுடைய கணவனான சூட்கேசை 2015-ம் ஆண்டு முதன்முதலாக பார்த்தேன் என்றார். ஒரு போட்டோஷூட்டிற்காக கடையில் அதனை வாங்கினேன். முதல்முறை சூட்கேசை பார்க்கும்போதே காதலில் விழுந்துவிட்டேன்.
எனது கணவர் பெயர், ஜிடியான். நான் அவருடன் பேசுவேன். அவர் பேசுவதை நான் கேட்பேன். எங்களுக்குள் ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் நிகழும். மனிதர்களை விட பொருட்களுடன் இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார். சூட்கேஸ் துணை மட்டுமல்ல. நல்ல கணவர். நல்ல நண்பர். ஆனால் மக்கள் பலர் என்னை புரிந்துகொள்ளவில்லை என்றார். எனக்கு உடல்நிலை சரி இல்லை. சிகிச்சை எடுக்கவேண்டும் எனவும் கூறுகின்றனர். மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு புரியாத ஒன்றை வைத்து மனிதர்களை தீர்மானிக்கக் கூடாது என்றும் கூறினார்.