உலகத்தில் அதிக செய்தி சேனல்களை கொண்ட மொழி என்ற பெருமையை தமிழ் மொழி பெற்று விடும் போலிருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் மூன்று தமிழ் சேனல்கள் உதயமாக உள்ளது. தமிழ் மொழியில் செய்திகளுக்கான தற்போது வரை 18 செய்தி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இது தவிர ஒன்பது சேனல்களில் அவ்வப்போது செய்திகள் இடம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் அடுத்த மாதம் மூன்று புதிய தமிழ் சேனல்கள் தங்களது ஒளிபரப்பை துவக்க உள்ளன. ஏற்கனவே tv9 என்ற செயல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது டிசிஎல் என்று ஒரு சேனலும் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் என்ற சேனலும் தனது தமிழ்ப் பதிப்பை விரைவில் அரங்கேற்ற உள்ளது. அனேகமாக பொங்கல் தினத்தில் இருந்து இந்த சேனல் தனது ஒளிபரப்பை தொடங்கும் என்று தெரிகிறது. இதுகுறித்த தகவலை பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் கண்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொங்கலுக்கு உதயமாகும் ரிபப்ளிக் சேனல் தற்போது உள்ள பல தமிழ் செய்தி சேனல்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியத்தை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் செய்தி சேனலான ஈ டிவி பாரத் என்ற பெயரில் தமிழில் ஒரு செய்தி சேனலை தொடங்க பூர்வாங்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. நியூஸ்7 செய்தி சேனலில் இணை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நெல்சன் சேவியர் அங்கிருந்து ராஜினாமா செய்து விட்டார் அவர் டிசிஎல் சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக பொறுப்பு ஏற்பார் என்று தெரியவந்துள்ளது. இவரைத் தவிர தற்போது பல்வேறு சேனல்களில் பணிபுரிந்து வரும் செய்தியாளர்கள் உதவி ஆசிரியர்கள் பலரும் விரைவில் முகாம் மாற உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.