2020 ம் ஆண்டில் தனிமனித சுதந்திர குறியீட்டில் 111 இடத்தை பிடித்த இந்தியா!

by Loganathan, Dec 23, 2020, 20:21 PM IST

2020 ம் ஆண்டிற்கான தனிமனித சுதந்திர குறியீட்டை, அமெரிக்காவின் CATO மற்றும் கனடாவின் FRASER நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியிலில் முதல் மூன்று இடங்கள் முறையே நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஹாங்காங் நாடுகள் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 111 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான தரவுகள் மூலம் நாடுகளை வகைப்படுத்துதல் கடந்த 2008 ல் இருந்து நடைமுறையில் உள்ளது. 2018 ம் ஆண்டில் தனிமனித சுதந்திர குறியீட்டில் மொத்தம் 162 நாடுகள் இணைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பட்டியிலானது, கிட்டத்தட்ட 76 தரவுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. அதில்,

* சட்டத்தின் ஆளுமை
* பாதுகாப்பு
* நகர்வு
* மதம்
* குடிமையியல் சமூகம், கட்டமைப்பு
* வெளிப்படையான தகவல்
* அடையாளம் மற்றும் உறவு
* அரசின் ஆளுமை
* சட்ட அமைப்பு மற்றும் சொத்துரிமை
* பணப்புழக்கம்
* ஏற்றுமதி சுதந்திரம்
* கடன், வேலையாட்கள் மற்றும் வணிகம் சார்ந்த அமைப்புகள்

போன்ற காரணங்களை உள்ளடக்கிய தொகுப்புகளின் அடிப்படையில் இந்த குறியீடு பட்டியல் உருவாக்கப்படுகிறது. இந்த பட்டியலில் 0 முதல் 10 இடங்களில் வகிக்கும் நாடுகளில் உள்ள மக்கள் அதிகபட்ச சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள். அந்த நாடுகளின் சமூக பொருளாதார வளர்ச்சி நேர்த்தியான திசையில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில், அதாவது 162 வது இடத்தில் சிரியா உள்ளது. 10 பிராந்தியங்களில் அதிகபட்ச சுதந்திரம் உள்ள பிராந்தியமாக வட அமெரிக்கா ( கனடா மற்றும் அமெரிக்கா ), மேற்கு ஐரோப்பிய, மற்றும் கிழக்கு ஆசியா நாடுகள் உள்ளன. குறைந்தபட்ச சுதந்திரம் கொண்ட நாடுகளில் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகள் உள்ளன. https://tamil.thesubeditor.com/media/2020/12/human-freedom-index-country-profile-2020s.pdf

You'r reading 2020 ம் ஆண்டில் தனிமனித சுதந்திர குறியீட்டில் 111 இடத்தை பிடித்த இந்தியா! Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை