பஸ்தரை சேர்ந்த வாலிபர் ஒருவர், இரண்டு பெண்களை காதலித்து ஊரை கூட்டி ஒரே மேடையில் இருவருக்கும் தாலி கட்டிய சம்பவம் ஊர் முழுவதும் பரபரப்பாய் பேசப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் உள்ள பஸ்தரி கிராமத்தில் வசிப்பவர் சந்து மவுரியா. இவர் ஹசீனா மற்றும் சுந்தரி ஆகிய இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார். ஹசீனாவிற்கு வயது 19. சுந்தரிக்கு வயது 24. இந்நிலையில் இரண்டு பெண்களின் சம்மதத்துடன் சந்து மவுரியா லோஹங்கா கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்கு அந்த கிராமமே ஒன்று திரண்டு மணமக்களை அச்சதை தூவி வாழ்த்தினர். இந்த வகை திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என்றாலும் யாரும் இந்த திருமணத்தை நிறுத்த முன் வரவில்லை. ஆனால் அந்த மூவரின் குடும்பத்தில் இருந்து யாரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வில்லை. சந்து மவுரியா இந்த திருமணத்தை பற்றி கூறியதாவது:- இந்த திருமணம் எங்கள் மூவரின் விருப்பத்திற்கு ஏற்றது போல் நடந்துள்ளது. நான் இருவரையும் உயிருக்கு உயிராக விரும்பினேன்.
அவர்களும் அப்படித்தான்.. என்னை உண்மையாக நேசித்தார்கள். இதனால் நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம் என்று மணமகன் சந்தோஷமாக கூறியிருந்தார். இவர்கள் தவறான முறையில் கல்யாணம் செய்து இருந்தாலும் இவர்கள் மேல் எந்த வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.