போயஸ் தோட்டத்தில் இருந்து ஒரு புதிய பூகம்பம்..

by Balaji, Jan 29, 2021, 19:13 PM IST

போயஸ் தோட்டம் என்றதுமே பலருக்கும் ஜெயலலிதா நினைவுக்கு வருவார் ஆனால் அதே போயஸ் தோட்டத்தில் இருக்கும் இன்னொரு விவிஐபி ரஜினிகாந்த் கொஞ்சம் லேட்டாகத்தான் நினைவுக்கு வருவார். இங்கிருந்துதான் விரைவில் இன்னொரு பூகம்பம் புறப்படப் போகிறது. எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம் என்று தான் திரைப்படத்தில் பாடிய பாடலை விளக்கமாகச் சொல்லி அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டாலும் ரஜினியின் குடும்பத்தில் அந்த தாக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அப்போது ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகராக அடையாளம் காட்டப்பட்ட அர்ஜுன் ஒருத்தி புதிதாக கட்சியை துவங்குவதாக அறிவித்திருப்பதும் அதற்கு பின்னணியில் ரஜினிகாந்தின் மனைவி லதா வின் ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. ரஜினி தான் கட்சி ஆரம்பிக்கவில்லை அவரது மனைவி ஆரம்பிக்கலாமே என்று பல குரல்கள் எழுந்ததும், விஷயம் தீவிரமாக டிஸ்கஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இது தாக்குப்பிடிக்குமாஇல்லையா என்பதை பல்ஸ் பார்க்கத்தான் அர்ஜுன மூர்த்தி தாமே ஒரு கட்சி ஆரம்பிக்க இருப்பதாக பத்திரிகையாளரிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கட்சிக்கு லதா ரஜினிகாந்தின் முழு ஆதரவு இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் பின்னணியில் அர்ஜுன மூர்த்தி தரப்பு இருப்பதாக ஒரு தகவல். மனைவி லதாவே இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கிறார் அல்லது செய்வதறியாது திகைத்து இருக்கிறார் ரஜினிகாந்த் என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தது பதறிப்போனார் அர்ஜுன மூர்த்தி. சில நாட்கள் அமைதியாக இருந்தவர் ஜனவரி 28-ம் தேதி புதிய அரசியல் கட்சியை துவக்க இருக்கிறேன் என்று அறிவித்துள்ளார். எனது புதிய கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் எல்லாமே பா.ஜ.க-விலிருந்து வேறு பட்டதாகவே இருக்கும். ரஜினி ரசிகர்கள் யாவரும் எனது புதிய கட்சியில் சேரலாம் என்றும் தெரிவித்திருக்கிறார் அர்ஜுனமூர்த்தி.

அவர் இப்படி ரஜினி ரசிகர்களை அடிக் கோடிட்டு காட்டி இருப்பது தான் பல்வேறு சந்தேகத்தைக் கிளப்புகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்அவர் இப்படி ரஜினி ரசிகர்களை அடிக்கோடிட்டு காட்டி இருப்பதுதான் பல்வேறு சந்தேகத்தை கிளப்புகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 10 நாட்கள் பெங்களூருக்கு சென்று இருந்த ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் வற்புறுத்தலால் வீடு திரும்பியிருக்கிறார் வீடு திரும்பியதும் அர்ஜுனன் மூர்த்தி அவரை சந்தித்து இருக்கிறார். தனது புதிய கட்சி குறித்து ரஜினியிடம் அர்ஜுனமூர்த்தி விளக்கியிருக்கிறார் ஆனால் ரஜினிகாந்த் அதற்கு மறுப்போ ஆதரவோ எதுவுமே சொல்லவில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு வேலைகள் பாதி நிறைவடைந்து விட்டன. ஓரிரு மாதங்களில், எஞ்சிய ஷூட்டிங் கை முடித்துவிட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்கா செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தான் மருத்துவப் பரிசோதனைக்கு ஏப்ரல் மாதத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் ஒரு தகவல். ரஜினி பெங்களூர் சென்றிருந்த போது சென்னையில் அர்ஜுனமூர்த்தி லதா ரஜினிகாந்தை மூன்று முறை சந்தித்திருக்கிறாராம். தமிழகத்தில் 10 சதவிகித வாக்குகள் நிச்சயம் ரஜினிகாந்த் கண் அசைவுக்காக காத்திருக்கின்றன இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அவரை நம்புகிறார்கள். அவர்களை நாம் திறமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கு இதுதான் தக்க தருணம். தலைவர் ஒதுங்கிவிட்டார் நீங்களாவது வரலாமே என்று லதாவிடம் அர்ஜுன மூர்த்தி அப்போது சொல்லியிருக்கிறாராம். தேவைப்பட்டால் ரஜினியின் ஆதரவையும் எந்த சிக்கலுமின்றி பெற்றுவிடலாம் என்று சொல்ல லதா ரஜினி காந்தும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளில் தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட மூன்று மாவட்டச் செயலாளர்கள் தி.மு.க-வுக்கு சிலர் அதிமுக பக்கம் செல்ல தயாராக உள்ளனர்.

இப்படி டைலமாவில் இருப்பவர்களை கவனித்து தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சி செய்த போதுதான் தான் யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று மன்றத்தின் சார்பில் பச்சைக்கொடி காட்ட அ.தி.மு.க தரப்பு சைலன்ட் ஆகிவிட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி பேச்சு வந்தது. லதாவின் `பீஸ் ஃபார் சில்ட்ரன் என்கிற அமைப்பின் தலைவரான திண்டுக்கல் தம்புராஜ் தான் இந்த தூபத்தை போட்டவர் என்கிறார்கள். இவர் லதாவின் தீவிர விசுவாசி. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இவர் தலைமையிலான அமைப்பில் சுமார் 10,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ரஜினியின் புதிய கட்சி வேலைகள் நடந்தபோது இந்த அமைப்பும் பெரிதும் கவனிக்கப்பட்டது. இது பற்றி சிலர் ரஜினிக்குத் தகவல் சொல்ல லீவ் இட் என்று சொல்லி விட்டாராம் ரஜினி. ரஜினி அப்படி சொன்னதற்கு காரணம் தனது மனைவி தலைமையிலான அமைப்பு என்பதால் தான். எனவே லதா ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அதில் தம்புராஜின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.

கட்சி ஆரம்பிக்க இருப்பதாக ரஜினி சொன்ன நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் தெரியவந்தன. அப்போது மன்ற நிர்வாகிகள் பலரிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. ஏன் கையெழுத்து என்பது அப்போது எங்களுக்கு புரியவில்லை. இப்போதுதான் புரிகிறது... லதா ரஜினிகாந்த் பெயரில் மக்கள் சேவைக் கட்சியை மாற்றவே இந்த கையெழுத்து வாங்கியிருப்பதாக நினைக்கிறோம் என்று சொல்கிறார் மன்ற நிர்வாகி ஒருவர். லதாவின் உறவினர், அர்ஜுனமூர்த்தியின் தோஸ்த் ஒருவர், ஒரு வக்கீல் ஆகிய மூவரும் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்றும் அந்த நிர்வாகி சொன்னார். மனைவி லதாவே களத்தில் இறங்க இருப்பதால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் ரஜினிகாந்த். தன் முடிவுக்கு மாறாக, குடும்பத்தினர் முடிவெடுத்து விட்டால் என்ன செய்வது? என்ற குழப்பமே அவரை வாட்டி வதைக்கிறது என்று சொல்கிறார்கள். ஒருவேளை லதா ரஜினி தரப்பிலிருந்து திட்டவட்டமான அறிவிப்பு வந்த பிறகு ரஜினியின் ரியாக்ஷன் என்ற பூகம்பம் வந்தாலும் வரலாம் என்பது தான் போயஸ் தோட்டத்தின் லேட்டஸ்ட் நிலவரம் .

You'r reading போயஸ் தோட்டத்தில் இருந்து ஒரு புதிய பூகம்பம்.. Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை