நிழல் நிஜமானது.. ஆளில்லா மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்: ஹைதராபாத் டாக்டர்கள் சாதனை

by Balaji, Feb 2, 2021, 19:54 PM IST

தமிழில் வெளியான சென்னையில் ஒரு நாள் திரைப்பட பாணியில் .. விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயயின் இதயத்தை வேறு ஒருவருக்கு பொருத்த டாக்டர்கள் பயணிகள் இல்லாத மெட்ரோ ரயிலில் இதயத்தை கொண்டு சென்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் வாராங்கலை சேர்ந்த விவசாயி நரசிம்மா ரெட்டி என்பவர் ஒரு விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடந்தார். இந்த நிலையில் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதன்படி நரசிம்மா ரெட்டியின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட எட்டு உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஹைதராபாத் எல்.பி நகரில் உள்ள காமினேனி மருத்துவ மனையில் மூளைச்சாவு அடைந்த விவசாயி நரசிம்மா ரெட்டி இதயத்தை ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. காமிநேனி மருத்துவமனையிலிருந்து ஜூபிலி ஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனைக்கு ரோடு மார்க்கமாக இதயத்தை கொண்டு செல்வதில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்று கருதிய அதிகாரிகள் அதனை மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். எல்.பி. நகர் பகுதியில் இருந்து ஜுப்ளி ஹில்ஸ் பகுதிக்கு கிரீன் சேனல் என்று கூறப்படும். தடையில்லா போக்குவரத்து மூலம் இதயத்தை கொண்டு செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

கிரீன் சேனல் மூலம் ஐந்து நிமிட நேரத்தில் இதயத்தை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அங்கிருந்து பயணிகள் இல்லாத ஒரு மெட்ரோ ரயில் மூலம் 30 நிமிடத்தில் இதயம் ஜூப்ளி ஹில்ஸ் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அசுர வேகத்தில் அப்போலோ மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது. தற்போது அந்த நபருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்து வருகிறது . இன்று மாலை 4 மணிக்கு துவக்கப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் இரவு 11 மணிக்கு முடிவடையும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

You'r reading நிழல் நிஜமானது.. ஆளில்லா மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்: ஹைதராபாத் டாக்டர்கள் சாதனை Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை