எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சாலையில் கிடந்த 21,700 ரூபாயை போலீஸிடம் ஒப்படைத்தால் அச்சிறுவனை பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கசாவடி பகுதியை சார்ந்தவர் பத்மநாபன். இவருக்கு 14 வயதில் ஒரு சிறுவன் உள்ளார். அந்த ஊரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த புத்தன் கிழமை அன்று நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். அப்பொழுது சாலையின் ஒரத்தில் 21,700 ரூபாய் கிடந்துள்ளது.
அதனை கைப்பற்றிய சிறுவன், பணத்திற்க்கு சொந்தக்காரார் யரென்று தெரியாததால் பெற்றோரிடம் கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க கூறியுள்ளார். அடுத்த நாள் சிறுவன் மற்றும் அவரது தாய் இருவரும் விழுப்புரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று பணத்தை ஒப்படைத்தனர். சிறுவனின் நேர்மையை கண்டு ஆச்சார்யப்பட்ட காவலர்கள் சால்வையை அணிவித்து அவர்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த சிறுவயதில் மற்றவர் பணத்திற்க்கு ஆசை படாமல் உரியவரிடம் ஒப்படைக்க நினைத்த சிறுவனுக்கு பல பாராட்டுகள் வந்த வன்னம் இருக்கின்றது.