பணம் திருடியதாக கூறி இளைஞரை மரத்தில் கட்டி போட்டு இரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக தாக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் வசிப்பவர் தான் ராகுல். இவர் அதே ஊரில் மணலை திருடி விற்கும் கும்பலிடம் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு வீட்டில் பணம் திருடியதாக கூறி ஒரு மரத்தில் அவரை கட்டி போட்டு தாறுமாறாக ஒரு கும்பல் தாக்கியுள்ளது.
கண்களில் துணியை கட்டி அவரை குனிய வைத்து கால்களில் இரும்பு கம்பியை வைத்து சரமாரியாக அடிக்கின்றனர். வலிதாங்க முடியாத ராகுல் 'என்னை விட்டுருங்கண்ணா' 'ரொம்ப வலிக்குது' என்று கெஞ்சுகிறார். ஆனால் அந்த கும்பல் எதையும் பொருட்படுத்தாமல் ராகுலை தொடர்ந்து ரத்தம் வழிய வழிய தாக்கினர். ஒரு கட்டத்தில் ராகுல் வலியை தங்க முடியாமல் மயங்கி விழுந்தார்.
இந்த கும்பலின் தலைவர் ராகுல் தாக்கப்படுவதை முழுவதும் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது ராகுல் ஒரு வீட்டில் 30,000 திருடி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அந்த கும்பலை கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றது. ராகுலுக்கு நீதி கேட்டு பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.