2019 தேர்தலில் மத்தியில் மட்டுமல்லாது 29 மாநிலங்களையும் பிடிக்க பிரதமர் மோடி தலைமையிலான சிறப்புக் குழு ஒன்று தீவிர ஆலொசனையில் ஈடுபட்டு வருகிறது.
வருகிற 2019-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மீது அரசியல் கட்சிகளுக்கும் சரி நாட்டு மக்களுக்கும் சரி, மிகுந்த ஆர்வத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக்கொண்டேதான் இருப்போம் என மத்திய அரசும் கள்ள மவுனம் சாதித்து வருகிறது.
இந்த சூழலில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலின் போதே நாட்டின் 29 மாநிலங்களுக்குமான பொதுத்தேர்தலை ஒரே ஆண்டில் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை பார் போற்றும் பாரதப் பிரதமர் மோடியும் ஜனநாயக நாட்டின் ஜனாதிபதியும் சேர்ந்து ஓர் அற்புதமான முடிவை முன் வைத்திருக்கிறார்களாம்.
இதற்காக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 'மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால் 77சதவிகிதம் மத்தியில் வெற்றி பெறுபவரே மாநில ஆட்சியையும் கைப்பற்ற முடியும்' என்ற முடிவு கிடைத்துள்ளது. லாஜிக் சரிதான் என்றாலும் இன்னமும் நம்ம மோடுமுட்டி பிரதர்ஸ் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என நினைப்பது அவர்கள் தன்னம்பிக்கை என விட்டுவிட முடியாது.
காரணம், அரசியல் பெரியது. பின்னணி தெரியாமல் இருந்தால் ஜனநாயகம் பணநாயகத்தால் வெல்லப்படும். நாட்டின் தேர்தல் செலவுகளையும் நேரத்தையும் சேமிக்கவே இந்த உன்னதமான யோசனையை முன்வைப்பதாக மோடி அறிவித்துள்ளார். இந்திய ஜனநாயகமும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் நம் கையில் இல்லை என்றாலும் 'ஓட்டு' என்ற ஒற்றை பிரம்மாஸ்திரத்தால் இந்திய தலைவிதியை சீர்திருத்தி எழுதலாம்!