தேமுதிக: தேயுமா அல்லது தேறுமா?

by Balaji, Feb 17, 2021, 21:18 PM IST

ஒரு மனிதரின் உடல் நலமின்மை ஒட்டுமொத்த கட்சியே முடக்கிப் போட்டிருக்கிறது. தேமுதிகவிற்கு தான் இந்த நிலைமை. கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் யார் ஆட்சி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணியாக இருந்தது தேமுதிக. தமிழகத்தில் இப்போது தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகள் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே. ஆனால் இந்த தேர்தலில் மற்ற இரண்டு கட்சிகளும் தேமுதிகவை ஒரு கட்சியாகவே மதிக்கவில்லை. அப்படி ஒரு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குங்க என்று பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரேமலதா. இவர்தான் கட்சியின் பொருளாளர் என்றாலும் விஜயகாந்தின் உடல்நலம் காரணமாக ஒட்டுமொத்த கட்சியையும் நிர்வகிப்பது இவர்தான். கூட்டணி பற்றி பேச தலைவர் உத்தரவிட்டிருக்கிறார் என்று பல கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தேமுதிக அலுவலகத்தில் காத்துக் கிடந்தது.

2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களை வென்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. இக்கட்சி. அப்போது தேமுதிகவின் பலத்தை அறிந்து கொண்ட திமுக 2016 தேர்தலில் தனது கூட்டணிக்குள் கொண்டுவர கடும் முயற்சி செய்தது திமுக. ஆனால் அதற்கு டிமிக்கி கொடுத்த விஜயகாந்த், கடைசியில் மக்கள் நல கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என்ற லேபிளுடன் தேர்தலை சந்தித்தார். 2011 ல் கூட்டணி வைத்து ஜெயலலிதாவை முதல்வராக்க வழி செய்த விஜயகாந்த், 2016 ல் மக்கள் நலக்கூட்டணி மூலமாக வாக்குகளை பிரித்து மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க காரணமாக இருந்தார். 2006 ல் இடங்கள் என டாப் கியரில் பணித்த தேமுதிக 2016 இல் ஒரு இடத்தில் டெபாசிட் கூட பெறமுடியாமல் மிகப் பெரும் சரிவை சந்தித்தது. அதே போல 2014 மற்றும் 2019 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களிலும் அக்கட்சியின் வாக்குவங்கி கடுமையாக சரிந்தது. 10 சதவீத வாக்குகளுடன் அரசியல் பயணத்தை துவங்கிய தேமுதிகவின் தற்போதைய பலம் 2 சதவீதம் மட்டுமே. கேப்டனை எப்படியும் இன்று சந்தித்து விடவேண்டும்.

கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் இருந்த நிலை. ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழ் ஆகிவிட்டது எங்கள் கூட கூட்டணி வையுங்கள் ப்ளீஸ் என்று கெஞ்சாத குறையாக பிரேமலதா வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு தேமுதிகவின் நிலை மாறி இருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரக் கூடிய சூழ்நிலை இந்த நிலையில் தேமுதிக நிலைகொள்ளாமல் தவிக்கிறது. பிரேமலதா தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேச அது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகி விடுகிறது. தனித்துப் போட்டியிட்டால் அத்தனை தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று ஒரு நாளும் அடுத்த நாளே 41 தொகுதிகளுக்கு குறைந்தால் கூட்டணி வேண்டாம் என்றும் அவசியம் ஏற்பட்டால் மூன்றாவது அணியை உருவாக்குவோம். தேமுதிக ஆதரவுடன்தான் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சியமைக்கும் என்று இன்னொரு நாளும் பிரேமலதாவும், அவரது மகன் விஜய பிரபாகரனும் மேடைகளில் பேசி தாங்கள் குழப்ப நிலையில் தான் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் திமுகவுடன் நிச்சயம் கூட்டணி இல்லை என்ற பிரேமலதா தொடர்ந்து சொல்லி வருகிறார்.

அதேபோல் திமுக தரப்பிலும் தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்த ஐடியாவை இல்லை என்ற நிலை. ஆக தேமுதிகவின் ஒரே சாய்ஸ் அதிமுகதான். ஆனால் அந்தக் கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் துண்டுகளைப் போட்டு இடம் பிடித்து வருகின்றனர். அதேசமயம் அதிமுக தரப்பில் தேமுதிக இல்லாமல் தேர்தலை சந்தித்தால் என்ன என்ற கேள்வியும் விவாதப் பொருளாகி இருக்கிறது. வேண்டுமானால்10 முதல் 15 தொகுதிகள் தேமுதிகவுக்கு கொடுக்கலாம் இஷ்டம் இருந்தால் இருக்கட்டும் இல்லாவிட்டால் விலகட்டும் என்று அதிமுக தரப்பில் ஒட்டுமொத்த முடிவாக இருக்கிறது. தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை தக்கவைக்க குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அதனால் அதிமுக கொடுக்கும் இடங்களை என்பதைத் தவிர வேறு வழி இல்லை. கொடுக்கும் இடத்தை வாங்கிக்கொண்டு அதிமுக கூட்டணியில் நீடிப்பது. அமமுக அல்லது மூன்றாவது அணி அமைப்பது. இந்த இரண்டையும் இட்டால் தனித்துப் போட்டியிடுவது இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் தேமுதிகவிற்கு. தேமுதிக என்ன செய்யப்போகிறது, என்ற கேள்வியுடன் அக்கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தேமுதிக எங்கு இருக்கிறது என்பதை பொறுத்தே அக்கட்சி தேயுமா அல்லது தேறுமா என்பது பற்றி தெரியவரும்.

You'r reading தேமுதிக: தேயுமா அல்லது தேறுமா? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை