2015-16 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் மேலும் 5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும், அதற்காக தமிழநாடு, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ், மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆண்டுகள் ஓடிய நிலையில் இன்று தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவணை அமைக்க இடம் தேர்ந்தெடுத்து இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, பெருந்துறை, செங்கல்பட்டு மற்றும் செங்கிப்பட்டி ஆகிய மாவட்டங்களில் ஒன்றை தேர்வு செய்து அந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி துவங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு, தற்போது மதுரையின் தோப்பூர் பகுதியை தேர்வு செய்துள்ளோம்.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை அறைகள் கொண்டதாகவும், 100 மருத்துவ படிப்புக்கான இடங்களையும், நர்சிங் படிப்புக்கான வசதிகளையும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுள்ளதாகவும் இருக்கும்.
மத்திய அரசு மேற்கொள்ளும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்றும், சுமார் 1500 கோடி செலவில் இம்மருத்துவமனை அமைய உள்ளதாகவும் கூறினார்.